Also Watch
Read this
By: Manigandan Raja

அட்டவணையில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்
ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் போட்டிகள் செப்டம்பர் 13, 15, 17-ம் தேதிகளில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகளை செப்டம்பர் 11, 13, 14-ம் தேதிகளுக்கு மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அட்டவணை மாற்றம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டி: கோவை வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில் கோவை அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி திண்டுக்கல் அணியை 85 ரன் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய கோவை அணி, 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 'டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி திண்டுக்கல் அணிக்கு 16 ஓவரில் 179 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களிலேயே 93 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved