news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய மகளிர் ஜோடி அரையிறுதிக்கு தகுதி
tv

Also Watch

இந்திய மகளிர் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

மகளிர் இரட்டையர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய மகளிர் ஜோடி

இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்திய மகளிர் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் சீன வீராங்கனைகள் ஜியா யிஃபான் மற்றும் ஜாங் ஷு சியான் ஜோடியுடன் இந்திய வீராங்கனைகள் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் மோதினர்.

இதில் சீன வீராங்கனைகள் முதல் செட்டை வெல்ல, பதிலடியாக 2 மற்றும் 3 வது சுற்றை இந்திய வீராங்கனைகள் 21-க்கு 15, 21-க்கு 13 என வென்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 409 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-க்கு 0 என முன்னிலை வகிக்கிறது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்று

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி மற்றும் பிரான்ஸ் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், இத்தாலியின் பிளேவியோ கோபாலி ஆகியோர் மோதினர்.

இதில், இத்தாலி வீரர் 2-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-க்கு 3, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் தியாகோ ஆஸ்டினை வீழ்த்தினார். இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இருவரும் மோதுகின்றனர்.

Related Link
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா அசத்தல்

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா அசத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்பிளின் iPhone 18 Pro மாடல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved