Also Watch
Read this
By: Manigandan Raja

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி மாதம் மற்றும் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து பின்னர் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம் மற்றும் நகை காணக்கியாக செலுத்தினர்.
கடந்த 11 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ரமணி, முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

நகை, பணம் , சில்லரை தனித் தனியாக பிரித்து எண்ணப்பட்டது. காலை முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி முடிவில் திருப்பணி உண்டியல் காணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 389 ரூபாய் காணிக்கையாகவும், 293 கிராம் தங்கம் மற்றும் 7153 கிராம் வெள்ளி பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved