Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பெரிய அளவில் பாதிக்க வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய
தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள ஒரு பகுதியில் வாகன சோதனை நடத்தி அதில் வந்த நபரை பிடித்து விசாரித்து அதன் அடிப்படையில் சோதனை நடத்தி சுமார் நூற்றி எண்பத்தி ஒரு கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனை விற்பனைக்காக பதிக்க வைத்திருந்த சிரஞ்சீவி என்ற நபரை கைது செய்த கோவில்பாளையம் மதுவிலக்கு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது இதனை எடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காலேஜ் ரோடு என்ற இடத்தில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கோவை கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவில்பாளையம் பகுதியில் ஒரே நாளில் சுமார் 200 கிலோ அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved