Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை மாநகரத்தின் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை உலகத் தரத்திற்கு நவீனமயமாக்க, மத்திய அரசு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து சுமார் 230 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவியைப் பெறுகிறது.
மத்திய நிதியமைச்சகத்தின் துணைச் செயலாளர் சௌரப் சிங் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குநர் மியோ ஓகா ஆகியோர் இந்த மெகா கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பருவமழை காலங்களிலும் தடையற்ற குடிநீர் விநியோகம், வெள்ளப் பாதிப்பு இல்லாத கழிவுநீர் அகற்றும் நவீன அமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.

நகரின் பல்வேறு பகுதிகளில் 170 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் பதிக்கப்படவுள்ளன.சென்னையில் உள்ள 7 நீர் இறைப்பு நிலையங்கள் மற்றும் 38 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்.
புதிய தொழில்நுட்பங்களின் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான அழுத்தத்தில் தூய்மையான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.மழைக்கால பாதிப்புகளைக் குறைத்து, சென்னை வாழ் மக்களின் பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் இந்த விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved