news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாசுபட அம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா கோலாகலம்
tv

Also Watch

மாசுபட அம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா கோலாகலம்

வேலூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தீமித்து நேர்த்திக்கடன்

மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்ற கரகம், உற்சவர்

ஆடி 6ம் வெள்ளி முன்னிட்டு மாசுபட அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது 500 மேற்பட்ட ஆண்கள் பெண்கள் தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து நேர்த்திக்கடன்
வாய் மற்றும் முதுகில் அழகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் பழமையான ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் இன்று 6ம் வெள்ளியை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவு செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து மாசுபட அம்மன் கரகம் மற்றும் உற்சவர் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு செவ்வாடை அணிந்தும் அம்மன் வேடமிட்டு மேளதாலங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். 


மாசுபட அம்மன் கோயில் அருகே தீ குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர் அம்மன் வேடமிட்டு ஒம்சக்தி ஆதிபராசக்தி என்ற கோஷமிட்டுவாரு பெண்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் பக்தர்கள் முதுகில் அழகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி மாசுபட அம்மனுக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் ஜோடிக்கப்பட்ட வாகனத்தில் மாசுபட அம்மன் அலங்கரிக்கப்பட்ட உற்சவத்தை முதுகில் அழகு குத்தி இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் இந்த திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Link
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.5 கோடி காணிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.5 கோடி காணிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியிருக்க வீடு கட்டுவதாக தொழுகை கூடம் அமைத்த நபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved