news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home
tv

Also Watch

தென்கிழக்கு ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

டோக்கியோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜப்பான்

டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

தென்கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வீடுகள், கட்டடங்கள் குலுங்கின, பல்வேறு இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது.

டோக்கியோ மற்றும் நரிட்டா விமான நிலையத்திற்குச் செல்லும் விரைவு ரயில்கள், உள்ளூர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. புல்லட் ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பாலஸ்தீன விவசாயியின் கழுதையை திருடி கொடூரக் கொலை

பாலஸ்தீன விவசாயி ஒருவருக்குச் சொந்தமான கழுதையை திருடிய, இஸ்ரேலிய குடியேறிகள் சிலர் அதனை தங்களது வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் குடியேறி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட அவிச்சாய் சுயிஸ்ஸா ((Avichai Suissa)) உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி

அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனை SIM CARD வைத்திருக்கலாம்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved