Also Watch
Read this
By: Fyrose Banu

சேலம் அயோத்தியாபட்டினம் அருகே பால் ஊற்ற மறுத்து உற்பத்தியாளர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர் மூக்கனூர் S.M.D.1087 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் பால் கேன்களுடன் சங்கத்தின் முன்பு திரண்ட பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் கொண்டு வந்த பாலை ஆவினுக்கு ஊற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved