Also Watch
Read this
By: Fyrose Banu

மதுரை சோழவந்தான் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பணிக்கு செல்லாமல் புறக்கணித்து சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்
கோரிக்கைகளை பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே கோரிக்கை நிறைவேறும் வரை பணிக்கு செல்லாமல் தொடர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர். எனவே அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என தற்போது தூய்மை பணியாளர்கள் கூறி தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved