news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், அதிர்ச்சி தகவல்

மீட்பு பணிகள் தீவிரம்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நேபாள நாட்டில், ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 37 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேருந்துகளில் சுற்றுலா சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக மீட்பு என்றும் தகவல் வெளியானது.

தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் திமூர் பாதுகாப்பு படை முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் மீட்பு பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.


நேபாளத்திற்கு சுற்றுலா சென்று வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசின் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி உள்ளது.

பெரு வெள்ளத்தால் பாதிப்பு
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் சீறி பாய்கிறது நேபாள நாட்டின் போதே கோஷி ஆறு. இந்த ஆற்றின் இரண்டு கரைகளில் உள்ள ஊர்களில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

சுற்றுலா சென்ற தமிழர்கள்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 முதல் 60 சுற்றுலாப் பயணிகள் சிக்கி உள்ளனர்.


இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதி மற்றும் போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

மீட்பு நடவடிக்கை தீவிரம்
சுற்றுலா சென்றவர்களில் இதுவரை 20 முதல் 23 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அங்குள்ள ராணுவ முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளனர்.

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்க, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.பயணிகளின் முழுமையான விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் 110 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved