news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை கயாடு லோஹர், கட்டுக்கடங்காத கூட்டம்

நன்றி தெரிவித்த நடிகை

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை புறவழிச்சாலையில் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகை கயாடு லோஹரை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், ரசிகர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரசிகர்களிடையே பேசிய கயாடு லோஹர், தன்னை பார்ப்பதற்காக இவ்வளவு வெயிலிலும் காத்திருந்ததற்காக நன்றி தெரிவித்தார்.

மதுரை எப்போதுமே எனக்கு விருப்பமான ஊர் - கயாடு
மதுரை பைபாஸ் சாலையில், தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை கயாது லோஹர் வருகை தந்தார். அவரைக் காண, காலை முதலாகவே ஏராளமான இளைஞர்கள் குவிய தொடங்கினர். விடுமுறை தினத்தை முன்னிட்டு, நடிகையின் வருகையை எதிர்பார்த்து ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடிய நிலையில், இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

நடிகை மகிழ்ச்சி
திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர், ரசிகர்களை பார்த்து, ‘இவ்வளவு வெயிலிலும் நீங்கள் காத்திருந்தது, என்னை பார்க்க வந்திருந்தது மகிழ்ச்சி. மதுரை மக்களுடைய அன்பை பார்ப்பதும் மகிழ்ச்சி. மதுரை உணவு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று’ என்று கூறி கொஞ்சும் தமிழில் பேசிய பிறகு கடையை திறந்து வைத்துவிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

சலசலப்பு, தள்ளுமுள்ளு
திரைப்பட நடிகையின் வருகையை முன்னிட்டு கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

காவலர்கள் மற்றும் தனியார் பவுன்சிலர்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Link
ஆண்டனி வர்கீஸின்

ஆண்டனி வர்கீஸின் "7 ஸ்டார் பாய்ஸ்" செப்.4ல் ரிலீஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரந்தூர் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved