Also Watch
Read this
திமுகவில் 110 புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் பட்டியலை அடுத்த வாரம் கட்சித் தலைமை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோல்வியை தொடர்ந்து...
சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தவும், அப்பதவிக்கு 70 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கவும், ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக பதவி வகிக்கவும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 110 புதிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்கம் தென்னரசு தலைமையில்...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது. திமுகவில் செய்ய வேண்டிய மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் சமீபத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

அடுத்த வாரத்தில்...
இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவில் மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும் , மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சம் 70 என்ற வயது நிர்ணயமும், அடங்கும்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்டங்கள் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அடுத்த வாரம் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved