news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

30 சதவீதம் முக்கியம் தலைவரே, கனிமொழி டிமாண்ட்

லிஸ்ட்டை நீட்டும் உதயநிதி, தர்மசங்கடத்தில் திமுக

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவில் கட்சி கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முக்கிய தலைகளுக்குள் அதிகாரப்போட்டி மையம் கொண்டுள்ளதாக அறிவாலய வட்டார தரப்பில் கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் ஒரு பக்கம் நெருக்க, கனிமொழியும் 30 சதவீதம் தனது ஆதரவாளர்களுக்கு தான் என டிமாண்ட் வைக்க, கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இளரத்தங்களை பாய்ச்ச வேண்டாமா? என உதயநிதியும் ஒரு லிஸ்ட்டை நீட்ட மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட முடியாமல் தலைமை தர்மசங்கடத்திற்கு ஆளாகி உள்ளதாம்.

எதிர்க்கட்சியான திமுக
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பல அரசியல் கணிப்புகளை தாண்டி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து எதிர்க்கட்சி நாற்காலிக்கு சென்றது திமுக. இதற்கு காரணம் திமுக மாவட்ட செயலாளர்கள், குறுநில மன்னர்கள்போன்று உலா வந்தது தான் என்பதே மறுசீராய்வுக் குழுவினர் திரட்டிய தகவல்கள் மூலம் தெரிய வந்தது. கட்சிரீதியாக அதிரடி மாற்றங்கள் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி நாற்காலியும்கூட இல்லாமல் போகும் எனக் கருதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 22ஆம் தேதி செயற்குழு கூட்டத்தை கூட்டி அதில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். அது பழுத்த நிர்வாகிகளுக்குதான் பெரிய ஷாக்கை கொடுத்தது.

110 ஆக உயரும்
கட்சி நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், மாவட்ட செயலாளர்கள் ஒருவர் இனி 3 முறை மட்டுமே அந்த பதவியில் நீடிக்க முடியும் என்று அறிவித்த நிலையில், அவர்களுக்கான அதிகபட்ச வயதும் 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி பார்த்தால் தற்போது திமுகவில் 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்கள் 13 பேருக்கு அரசியலில் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. மேலும், ஒன்றிய செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும் கிளை செயலாளர்களின் வயது வரம்பு 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் திமுகவில் அதிகார குவியல் என்ற குற்றச்சாட்டை அழித்து அதிகார பரவல் என்பதை நிலைநாட்டவே.

நாங்கள் உழைத்த உழைப்பு வீணா?
கட்டமைப்புகளை மாற்றிவிட்டோம், இனி இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும், கட்சியும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என தலைமை ஒரு பக்கம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தால் மறுபக்கம் முக்கிய தலைகளுக்குள் அதிகார போட்டி சூடுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல ஆண்டுகள் செல்வாக்குடன் சுற்றிய மூத்த நிர்வாகிகள் பதவியை இழக்கும் சூழலில் உள்ள நிலையில் இத்தனை ஆண்டுகளும் நாங்கள் உழைத்த உழைப்பு வீணா? என்ற வருத்தத்திலும் உள்ளார்களாம். அதனால், மாவட்ட அளவில் பொறுப்புகளை இழந்தாலும் மாநில அளவில் துணைப் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கி உள்ளதாகவும், அதேநேரம் அவர்கள் ஏற்கெனவே இருந்த மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் தாங்கள் கை காட்டும் நபர்களுக்குதான் வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைமையிடம் அதிகாரமாகமே கோரிக்கை வைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.


கனிமொழி டிமாண்ட்
இதனால் ஏற்கெனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் தலைவர்களுக்கும், புதிதாக அதிகாரத்தைப் பெற முயற்சி செய்யும் நிர்வாகிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கட்சியில் தனக்கென ஒரு அடையாளத்துடன் உள்ள கனிமொழி, மாநில அளவில் பவர்ஃபுல் பொறுப்புக்கு குறிவைப்பதாகவும், அதுமட்டுமல்லாது மாவட்ட செயலாளர்களில் 30 சதவீதம் தனது ஆதரவாளர்கள்தான் இருக்க வேண்டும் என கனிமொழி நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் அதிக மாவட்ட செயலாளர்களை கேட்டு கனிமொழி டிமாண்ட் வைப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் தான்...
இதற்கு மத்தியில், இளரத்தங்களின் வாடை குறைந்ததால்தான் 2026 தோல்வியே என்ற காரணத்தை சுட்டிக்காட்டும் உதயநிதி, கடந்த முறைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவிடாமல் மூத்த நிர்வாகிகள் முட்டுப்போட்டனர். இந்தமுறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதியும் தன்பங்குக்கு ஒரு லிஸ்ட்டை வைத்துக்கொண்டு நெருக்குகிறாராம்.

கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டுபோக தேவை உள்ளதால் உதயநிதி சொல்வதையும் தலைமையால் மறுக்க முடியவில்லை. இப்படி 3 பக்கமும் நெருக்கடி உள்ளதால் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து முடிவெடுக்க முடியாமல் தலைமை திணறி வருவதாக கூறப்படுகிறது. அதனாலேயே, இந்த வாரம் வெளியாக வேண்டிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அடுத்த வாரம் வெளியிடும் நிலைக்கு தலைமை தள்ளப்பட்டுள்ளதாம்.

Related Link
திமுகவில் 110 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

திமுகவில் 110 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

30 சதவீதம் முக்கியம் தலைவரே, கனிமொழி டிமாண்ட்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved