Also Watch
Read this
By: Manigandan Raja

ஓணம் கொண்டாட்டம்: நடிகை அசின் பகிர்ந்த புகைப்படங்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, நடிகை அசின் தனது மகளின் அரிதான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மஞ்சள் நிற உடையுடன் பூக்களை அடுக்கும் அந்த சிறுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரளத்தை சேர்ந்த இவர், கடந்த 2016-ல் ராகுல் சர்மாவை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு அரின் என்ற மகள் உள்ளார்.
நானி நடித்துள்ள "தி பாரடைஸ்" திரைப்படம்
நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சூரி நடித்துள்ள "மண்டாடி" திரைப்படம்
நடிகர் சூரி நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 10-ம் தேதி ரிலீஸாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved