news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இன்று ஆசிரியர் தினம், குவியும் வாழ்த்து

வீடியோ வெளியிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆசிரியர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆசிரியர் தினம் - முதலமைச்சர் வாழ்த்து
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு;
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்.

ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி. அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Link
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,360 சரிவு

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved