Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தகவல்
ஈரானின் 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், விமானம் தாங்கிக் கப்பலும், ஏவுகணை அழிப்புக் கப்பலும் இணைந்து ஈரானின் பல தாக்குதல்களை வெற்றிகரமாக தவிர்த்ததாக தெரிவித்துள்ளது.
எனவே, ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் பிக்காகஸ் மலை பகுதியில் விரைவில் தாக்குதல்
ஈரானின் பிக்காகஸ் மலைப் பகுதியில் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதே தங்களின் முதன்மை நோக்கம் எனவும், பிக்காகஸ் மலைப் பகுதியில் ஏதாவது செயல்பாடுகளை கண்டறிந்தால் அணுசக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈரான் முழுவதும் நடைபெறும் அனைத்தையும் தாங்கள் அறிவோம் எனவும், தவறு ஏதாவது செய்தால் ஈரான் மீது பலமான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.
விமானப்படை விமானம் விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு
கிரீஸ் நாட்டில் வான் சாகச நிகழ்ச்சியின்போது விமானப்படை ஜெட் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏதென்ஸ் அருகே தனக்ரா விமானப்படைத் தளத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு மத்தியில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றபோது, ஜெட் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனால், விமானம் தீப்பிடித்து அடர்ந்த கருப்புகை கிளம்பியவே, காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved