news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இஸ்ரேல் மீது கட்டவிழ்த்துவிட ஈரான் திட்டமிடுவதாக தகவல்

Jerusalem Post

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மிகப்பெரிய தாக்குதல்

ஹிஸ்புல்லா, ஹவுதி, ஹமாஸை ஒருங்கிணைப்பதாக தகவல்

"2023 அக்டோபர் 7" தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்துவதற்கான திட்டத்தை ஈரான் வகுத்து வருவதாக Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி, காசாவின் ஹமாஸ் மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை ஒரே நேரத்தில் களமிறக்கவும் ஈரான் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் குத்ஸ் படை அதிகாரிகள், காணொளி மாநாடுகள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், தாக்குதலுக்கு ஏற்ற பதிலடி என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், போரின் விதிகள் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் நலன்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், முன்பைவிட வேகமாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 100 பேர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 60 குழந்தைகள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனியர்களின் உடல்களை, வடக்கு காசா பகுதியில் வைத்து ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

Related Link
‘அரக்கப்பூ’ கண்டுபிடிப்பு

‘அரக்கப்பூ’ கண்டுபிடிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் ஆசிய கோப்பை லீக் போட்டி வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved