Also Watch
Read this
By: Manigandan Raja

பந்துவீச்சாளர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு
ஐபிஎல் போட்டிகளில் நடைமுறையில் உள்ள 'IMPACT PLAYER' விதிமுறைகளை தான் எதிர்ப்பதாகவும், இந்த விதியால் சில நேரங்களில் உடற்தகுதியுள்ள வீரர்கள் கூட வெளியில் அமர வைக்கப்படுவதாகவும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்தார்.
'IMPACT PLAYER' விதி மூலம் கூடுதல் பேட்டர்கள் விளையாடுவதால் பந்துவீச்சாளர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுவதாகவும் ரெய்னா கூறினார்.
சூரத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி
விளையாட்டையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற 'SUNDAYS ON CYCLE' பேரணியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக் கணக்கான உடற்பயிற்சி ஆர்வலர்களும் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன்
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வேயை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே, 18 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved