news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் புதிய உலக சாதனை

ஆசியக் கோப்பை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹர்மன் பிரீத் சாதனை

ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் கேப்டன்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக களமிறங்கியதன் மூலம்.

150 டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையையும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்த ஆட்டம், ஹர்மன் பிரீத் கவுரின் வரலாற்று சாதனை போட்டியாகவும் அமைந்தது.

உலக பாரா வில்வித்தை: இந்தியாவின் ஷீத்தல் தேவி அசத்தல்

உலக பாரா வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷீத்தல் தேவி முதலிடம் பிடித்து அசத்தினார். தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் 'நம்பர்-1' வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி, தகுதிச் சுற்றில் 720-க்கு 698 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

அதேபோல, மற்ற இந்திய வீராங்கனைகளான லால்பதி, சரிதா, பாயல் நாக் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமார், தோமன் குமார், குர்விந்தர் சிங் ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடர்

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சீனாவின் ஹி ஜி டிங் - ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொண்ட இந்திய ஜோடி, 11-க்கு 21, 21-க்கு 13, 21-க்கு 17 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

1 மணி நேரம் 10 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றை இந்த ஜோடி இழந்தாலும், மீண்டெழுந்து அடுத்த இரு சுற்றுக்களையும் கைப்பற்றி வென்றது.

Related Link
இம்பேக்ட் வீரர் விதிமுறைகளை எதிர்க்கிறேன்-ரெய்னா

இம்பேக்ட் வீரர் விதிமுறைகளை எதிர்க்கிறேன்-ரெய்னா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved