news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தவெக பிரமுகர் படுகொ*, கல்லூரி மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்

’பந்தா காட்டினார், பரலோகம் அனுப்பினேன்’

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை அடையாறில் தவெக பிரமுகரை அரிவாளால் வெட்டிக் கொ* செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது தந்தை மற்றும் பெரியப்பாவை கொ* செய்த தவெக பிரமுகரை அவரது மகள்களின் எதிர்காலத்திற்காகவே விட்டுவைத்தும், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் ஓவர் பந்தா காட்டியதாகவும், அதனாலேயே பரலோகம் அனுப்பியதாகவும் கூறி கல்லூரி மாணவர் அதிர வைத்துள்ளார்.

தொழிலதிபர், தவெக பிரமுகர்
சென்னை, அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலபதிர் கண்ணன், அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தான் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கண்ணனை பைக்கில் வந்த 5 பேர் ஓட ஓட அரிவாளால் வெட்டியும், தலையை மட்டும் குறிவைத்து பலமுறை கொத்தியும் கொ* செய்தனர். கண்ணனின் உயிர் அடங்கிய பிறகே அங்கிருந்து அந்த மர்மகும்பல் சென்றது.

கல்லூரி மாணவர் கைது
இதுதொடர்பான அதிர வைக்கும் சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ருக்மணி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி, அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கல்லூரி மாணவர் பரணி பல அதிர்ச்சி தகவலை வாக்குமூலமாக கொடுத்தார்.

யார் இந்த கண்ணன்?
பி கேட்டகரி சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கண்ணன் மீது 2 கொ* வழக்குகள், ஒரு கொ* முயற்சி என 3 வழக்குகள் உள்ளன. இதில், கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஒரு கொ* வழக்கு தான் கண்ணன் உயிரையே காவு வாங்கி உள்ளது தெரியவந்தது. ஏரியாவில் யார் பெரிய கை? என்ற போட்டியில் இந்திரா நகர் பகுதியில் சிவா என்பவரை கண்ணனும், அவரது சகாக்களும் சேர்ந்து வெட்டிக் கொ*றனர். ஆனால், விட்னெஸ் இல்லாத ஒரே காரணத்திற்காக நீதிமன்றம் கண்ணனை விடுவிக்க, சிவாவின் ஆன்மா சாந்தியடை வேண்டுமென்றால் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என அவரது அண்ணன் வேலு துடித்தார்.

பழிக்குப் பழியாக...
இதற்கு நேரம்பார்த்து காத்திருந்த வேலு, கண்ணனின் ஆஸ்தான குருவான மங்களேரி கந்தன் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு திருவான்மியூரில் வைத்து அரிவாளால் வெட்டி ஆட்டம் காட்டினார். அடுத்த, 2 ஆண்டுகள் காத்திருந்து வேலுவின் கதையை முடித்த கண்ணன், தனது குரு மங்களேரி கந்தனின் கல்லறையில் ரத்தக்கறை கொண்ட அரிவாளை சமர்ப்பணம் செய்தார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சிறுபிள்ளையாக இருந்தவர் தான் 20 வயது கல்லூரி மாணவர் பரணி. ஆனாலும், அப்பாவும், பெரியப்பாவும் கண்ணனின் அரிவாளுக்கு இரையானதும் அதனால் தனது தாயும், பெரியம்மாவும் தினம்தினம் கண்ணீர் வடிப்பது அவருக்கு தெரியாமல் இருக்குமா?

அமைதியாக இருந்த பரணி
கண்ணன் மீது சிவா-வேலு குடும்பத்தினருக்கு தீராத பகை தொடர்ந்துள்ளது. அந்த அச்சம் கண்ணனை எதிர்காலம் குறித்து யோசிக்க வைத்தது. குழந்தை குட்டி இல்லாத நேரத்தில் அரிவாளை துணிந்து எடுத்த கண்ணனுக்கு திருமணமாகி 2 மகள்கள் பிறந்ததும் கை நடுங்கியது.

மகள்களின் எதிர்காலத்திற்காக பழைய பகையை மறந்துவிடலாம் என சிவாவின் மகனான பரணியிடம் கண்ணன் சமாதானம் பேசி உள்ளார். அதற்கு, தான் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்துவதாக கூறிய பரணி, அதன்பிறகு ஒரு மாதமாக அமைதியாக தான் இருந்துள்ளார்.

அப்பா, பெரியப்பா ஆன்மா...
ஆனால், தவெகவில் இணைந்தபிறகு அடிக்கடி கட்சி நிகழ்ச்சி நடத்தி, ஏரியாவில் பெரிய ஆள் போன்று கண்ணன் ஓவர் பந்தா காட்டி வந்ததாக தெரிகிறது. இது, பரணியை ஆத்திரத்தில் ஆழ்த்த தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து தவெக பிரமுகரை கொ* செய்து பழிக்கு பழி தீர்த்துள்ளார்.

2 கொ*களை மன்னித்தும் அதனை நினைத்துப் பார்க்காமல் பந்தா காட்டினார், பரலோகம் அனுப்பினேன், தற்போது தனது அப்பா மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தியடைந்தது என பரணி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Related Link
மண்டையை பதம்பார்த்த செங்கல், ஊர் தலைவர் அடித்துக் கொ*

மண்டையை பதம்பார்த்த செங்கல், ஊர் தலைவர் அடித்துக் கொ*


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

த.வெ.க. ஆட்சிக்கான ஆதரவு தொடருமா? மார்க்சிஸ்ட் முடிவு

17
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved