Also Watch
Read this
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மோட்டார் தண்ணீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலுக்கு வழிவகுத்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் கல்லால் அடித்து கொ*லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்புகிறது.

கண்ணநல்லூர் கிராம பஞ்சாயத்து
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ளது கண்ணநல்லூர் கிராம பஞ்சாயத்து. இதன் தலைவராக 65 வயதான மகாராஜன் இருந்து வந்தார். இந்நிலையில், ஊருக்குள் கிராம பஞ்சாயத்து சார்பாக புதிதாக போர்வெல் அமைத்து அதன் மூலம் டேங்குகளில் தண்ணீரை நிரப்பி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் விநியோகத்தில்...
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் சரிவர இல்லையென தெரிகிறது. மகாராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற 30 வயது இளைஞர், தண்ணீர் விடச் சொல்லி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவருக்கு ஒருவர் வசைபாடியதாக சொல்லப்படுகிறது.

கல்லை எடுத்து...
ஒரு கட்டத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. நிலைமை மோசமான சூழலில் ஆத்திரமடைந்த இசக்கியப்பன் செங்கலை கொண்டு மகாராஜன் தலையை குறிவைத்து அடித்துள்ளார். இதில் கதிகலங்கி போன மகாராஜன், நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குற்றவாளி கைது
பஞ்சாயத்து தலைவரே கொ* செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் தீயாய் பரவி பதற்றம் தொற்றிக் கொண்ட நிலையில், நெல்லை எஸ்பி விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி நேரில் விரைந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், குற்றவாளி இசக்கியப்பனையும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved