Also Watch
Read this
சென்னையில் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்தித்து, தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சத்துடன் பேட்டி கொடுத்த இளைஞர், மறுநாளே அதே நேரத்தில் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொ* செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் மிரட்டியது ஏன்? மறுநாளே இளைஞர் வெட்டிக் கொ*லப்பட்டதன் பின்னணி என்ன?

காவல் நிலையம் அருகில்...
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், தமக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்கில் கைதாகி சிறை சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்திருப்பதாக கூறியவர், திருவொற்றியூர் போலீசார் தம்மை மிரட்டுவதாகவும் கடந்த செவ்வாய்கிழமை அன்று போலீஸ் நிலையம் முன்பு பேட்டி அளித்திருந்தார். தனது தாய்க்கு தெரிந்தவர், நவநீதம் என்ற பெண்ணிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியாததால், ஜாமீன் போட்டதற்காகவே தமது தாய் வட்டி செலுத்தி வந்ததாக பிரதீப் ராஜ் தெரிவித்திருந்தார். அந்த வகையில், 2 லட்சம் ரூபாய் வாங்கியதற்காக, இதுவரை 18 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் செலுத்தியிருப்பதாகவும், தற்போது 40 சதவீதம் வட்டி கேட்பதாகவும் வேதனையுடன் கூறியிருந்தார் பிரதீப் ராஜ். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் பிரதீப் ராஜ் தெரிவித்திருந்தார்.

பொய்வழக்கில் கைது
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்த நிலையில், நவநீதம் தரப்பில் அளிக்கப்பட்ட பொய் புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் தம்மை கைது செய்து சிறையில் அடைத்ததாக பிரதீப் ராஜ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, ஊரை விட்டு செல்லுமாறும் அல்லது எதிர் தரப்பினருடன் சமாதானமாக செல்லுமாறும் மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேட்டியில் கூறியிருந்தார். சிலர் செல்போன் மூலம் மிரட்டுவதாகவும், அதுகுறித்து புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புகார் கூறியவர் உயிரிழப்பு
இந்த நிலையில், புதன்கிழமை இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல், பிரதீப் ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸ் அலர்ட்
பிரதீப் ராஜ்ஜின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், முன்னாள் ரவுடியான கேட் ராதாகிருஷ்ணன், அவரது மகன் நவீன், கணேசன், முத்து, நவநீதம் ஆகியோர்தான் தமது மகனை வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டினார். பிரதீப் ராஜ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை மோப்பம் பிடித்த உளவுத்துறை, உள்ளூர் போலீஸ் நிலையத்தை அலர்ட் செய்ததை அடுத்தே, பிரதீப்ராஜை அழைத்து திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது.
மறுநாளே சம்பவம்

நான்கு பேர் கைது, விசாரணை
பிரதீப் கொ*யாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிய நிலையில், மாதவரம் பகுதியில் பட்டாக் கத்தியுடன் பதுங்கியிருந்த நாராயணன் என்ற நவீன், ஹரி கிருஷ்ணன், ஜபார், லோகேஷ் ஆகிய 4 பேரும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. போலீசார் முன்னிலையிலேயே தங்களை அவமானப்படுத்தியதால் பிரதீப் கதையை முடித்ததாக முக்கிய குற்றவாளியான நவீன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved