Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை
சௌதி அரேபியா மீதான ஏமனின் ஹௌதி கிளர்ச்சிப் படையின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், மக்கா பாதுகாப்புக் கூட்டணியின் முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது 3 நாடுகளும் மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான வன்முறை சார்ந்த ஒப்பந்தம் அல்ல எனவும், ஏதேனும் ஒரு கூட்டணி நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், 3 நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏமன் சிறைச்சாலை பலி 23 ஆக அதிகரிப்பு: 7 பேர் மாயம்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசு படையினருடன் இணைந்து சவுதி அரேபியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாயமான 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மீது சவுதி தாக்குதல் நடத்தியது.
ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு
சிரியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போரின்போது பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள், இட்லிம் மாகாணத்தின் சர்மாடாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆயுதக் கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீயுடன் கரும் புகையும் கிளம்பியது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved