Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் லாரன்ஸ் வோங்கினுக்கு 64% ஊதிய உயர்வு
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கினுக்கு 64சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது ஆண்டு வருமானம் 27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தச் சம்பள உயர்வு மூலம் தனக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிபருடன் சந்திப்பு
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தங்கள் நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்புவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்அவரை இலங்கை அதிபர் திசநாயகேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved