news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு என திருமாவளவன் நம்பிக்கை

"மிசாவில் அண்ணன் ஸ்டாலின்..."

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இடதுசாரிகள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முடிவு செய்வார்கள்
சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது;
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைத்துள்ளோம். இது ஒரு சக்திவாய்ந்த கூட்டணி என்பதால், இதில் வெற்றி பெறுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.வெ.க. தரப்பில் யாருக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது குறித்த முழு அதிகாரமும் அவர்களுக்கே உரியது. அதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களை ஆதரிப்பதா, வெற்றி பெற வைப்பதா? என்பதை அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்களே முடிவு செய்வார்கள்.

மிகுந்த கவனத்துடன்...
இந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஓர் அங்கமாக உள்ளது. எனவே, கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது கூட்டணிக்கான முக்கியத் தேவை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பாடுபடும். நாங்கள் இந்தக் கூட்டணியில் இருப்பதோடு, ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறோம். இதனால் த.வெ.க.விற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அவ்வப்போது அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் இணைந்துள்ளதால் அதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.

புதிய தலைமைச்செயலகம்...
பட்டினப்பாக்கத்தில், புதிய சட்டமன்றம் அமைப்பது குறித்து மீனவர்களும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். அந்த வட்டாரத்தைச் சார்ந்த பொது மக்களின் கருத்தையும் அறிந்துதான் அரசு இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இன்னும் அந்தப் பகுதி மக்களின் முழுமையான கருத்து என்னவென்று தெரியவில்லை. மக்களின் கருத்தை அறிந்த பிறகே தமிழ்நாடு அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும்.

Related Link
மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா? என கனிமொழி எம்பி கேள்வி

மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா? என கனிமொழி எம்பி கேள்வி

அண்ணன் ஸ்டாலின்...
தி.மு.க. தலைவர், அண்ணன் ஸ்டாலின் மிசா காலத்துக் கொடுமைகளைச் சந்தித்த முக்கியமான தலைவர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. அது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை. அக்காலத்தில் கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கும் வதைக்கும் உள்ளாக்கப்பட்ட தலைவர்களில் அவரும் ஒருவர். தன்னுடைய கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகவும், அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டதல்ல என்றும் முதலமைச்சரும் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சுட்டிக் காட்டியுள்ளது.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலமைச்சர் விஜயின் மாஸ்டர் பிளான், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved