Also Watch
Read this
By: Manigandan Raja

இதுவரை 23 முறை மோதியதில் இந்தியா 21-ல் வெற்றி
மகளிர் ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 'ஏ' பிரிவில் 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி, 'பி' பிரிவில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ள வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
இந்த இரு அணிகளும், டி-20 போட்டிகளில் இதுவரை 23 முறை மோதியதில் இந்தியா 21-லும், வங்கதேசம் 2-லும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 10 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்க ஓபன் காலிறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் போராடி தோல்வி அடைந்தார். மற்றொரு காலிறுதியில், அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோ, சகநாட்டு வீரரான அலெக்ஸ் மிச்செல்சனிடம் போராடி வென்றார்.

அதேபோல, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டு வீராங்கனையான எம்மா நவரோவை வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved