Also Watch
Read this
By: Manigandan Raja

துலீப் டிராபி இறுதிப் போட்டி
துலீப் டிராபி கோப்பையை இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி அசத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி 708 ரன்களும், தென் மண்டல அணி 336 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி 388 ரன்கள் எடுத்தபோது 5ஆம் நாள் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிகமாக ரன் எடுத்து லீடிங்கில் இருந்ததால் கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் நெதர்லாந்தின் பொடிக் உடன் ஸ்வரேவ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 6 க்கு 2 , 7 க்கு 5 மற்றும் 6 க்கு 1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved