news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

லண்டனில் முதல்வர் விஜய், உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படும்

25

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, அங்கிருந்த தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஐரோப்பிய நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கும் முதலமைச்சர் விஜய், அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தையும் தொடங்கி வைக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில்...
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக லண்டன் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாகத்துடன் அங்கிருந்த பொது மக்கள் வழியனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலை​யத்​தில் விவிஐபிக்கள் மட்டுமே செல்லும் 6ஆவது நுழைவு​வா​யில் வழி​யாக முதல்​வருடன் அவரது நெருங்​கிய நண்​பர் விஷ்ணுரெட்​டி செல்ல பாது​காப்பு அதி​காரி​கள் அனுமதி மறுத்தனர். இதனால், முதல்​வர் விஜய்​யும் விவிஐபி நுழைவு​வா​யிலை தவிர்த்து, பயணி​யர் முனைய​மான டெர்​மினல் 2ல் டி-9 நுழைவு​வா​யில் வழி​யாக உள்ளே சென்றார்.

தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படும்
முதல்வா் விஜயின் லண்டன் பயணத்தின் மூலம் பல கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈா்க்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகலாவிய திறன் மையங்கள் துறையில் முதலீடுகளை ஈா்க்க முதல்வர் விஜய் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும், இப்பயணம் மூலம் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு தமிழ்நாட்டில் உயா்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.

லண்டன் பயணத்தின் நோக்கம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பிரிட்டன் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம். லண்டனில் தொழிலதிபர்கள்,பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை எடுத்துரைக்க உள்ளார்.

சில முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. லண்டன் வாழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் முதல்வர் விஜய் பேசவுள்ளார். தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் விஜய், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையங்களை, இந்த பயணத்தின் போது பாா்வையிடுகிறாா்,

தல - தளபதி சந்திப்பு
லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார் என லீ மேன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடியசைத்து கார் பந்தயத்தை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி, முதல்வர் விஜய் நெகிழ்ச்சி

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி, முதல்வர் விஜய் நெகிழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காந்தி நோட்டுக்கு போட்ட கணக்கு, புழல் சிறையில் போலி பத்திரிகையாளர்

16
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved