news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மின்வெட்டு, உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மின்வெட்டுக்கு உரிய தீர்வை காணாமல் மின்துறை அமைச்சர் அவதூறுகளை உளறிக் கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு விவகாரம்...
"நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை," என்று சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்டேஜ் பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.

திசை திருப்பும் வேலை
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு, திசை திருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
போலீசிடம் பாதுகாப்பு கேட்டால் கொ*யா? என உதயநிதி கண்டனம்

போலீசிடம் பாதுகாப்பு கேட்டால் கொ*யா? என உதயநிதி கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் நலன், மனித நேயமே முக்கியம் என பிரதமர் மோடி திட்டவட்டம்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved