Also Watch
Read this

நடிகை திரிஷா உடன் நடிகை ராதிகா சரத்குமார் இருக்கும் செல்ஃபி வைரலாகி வருகிறது.
லண்டனில் நடிகை ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார், திடீரென லண்டன் சென்று உளார். அங்கு, நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோர் கார் பந்தயம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று, ராதிகா ஆச்சரியம் கொடுத்தார்.
லண்டனில் அஜித்குமார்
லண்டனில் நடைபெறும் ’மிச்செலின் லே மான்ஸ் கோப்பை’ சுற்றுப் போட்டியில், நடிகர் அஜித் குமார் பங்கேற்க உள்ளார். தீவிர பயிற்சியில் இருந்த அவரை, நடிகை ராதிகா சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

வீடியோ வைரல்
இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிக லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்த்து தெரிவித்த ராதிகா
நடிகர் அஜித் உடனான சந்திப்பை பகிர்ந்த நடிகை ராதிகா சரத்குமார், ’அசைக்க முடியாத ஆர்வம், அர்ப்பணிப்பு, லட்சியத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், அவர் ஒரு சிறந்த உத்வேகம்,’ என்று வீடியோ உடன் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.
லண்டனில் திரிஷா
இதுமட்டுமின்றி, தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில், மற்றுமொரு செல்ஃபி புகைப்படத்தையும் நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்து உள்ளார். அந்த செல்ஃபியில் ராதிகாவுடன் இருப்பது நடிகை திரிஷா.

நடிகை திரிஷா, மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்பாது அங்குச் சென்றிருக்கும் நடிகை ராதிகா அவரையும் சந்தித்து உள்ளார். தமிழ் நடிகைகள் இருவர், லண்டனில் சந்தித்துக் கொண்டதன் அடையாளமான செல்ஃபியை, இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

லண்டனில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், லண்டன் விமான நிலையத்தில் உள்ள காட்சிகள் பரவி வந்த நிலையில், கனடா டொராண்டோவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ராதிகாவும் லண்டன் சென்று உள்ளார். ஏற்கெனவே படப்பிடிப்புக்காக நடிகை த்ரிஷா லண்டனில்தான் உள்ளார். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் லண்டனில் இருப்பதால் அங்கிருந்து வரும் செல்ஃபிகளையும் வீடியோக்களையும் அவர்களது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
அஜித் கார் பந்தயம், முதல்வர் விஜய் பங்கேற்பு
ஏற்கெனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்று உள்ளார். நடிகர் அஜித் குமாரும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்காக லணடனில் இருக்கிறார். இந்த கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கார் பந்தய மைதானத்தை சுற்றி, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
சத்தம் போடாதீங்க...
இந்த நிலையில், மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் பங்கேற்க மைதானத்திற்கு வந்த அஜித்குமார், தன்னை பார்த்தவுடன் கத்தி கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி, "சத்தம் போடாதீர்கள், மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்," என சைகை மூலம் அறிவுறுத்தினார். இந்த காட்சிகளும் வைரலாகி வருகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved