Also Watch
Read this
By: Manigandan Raja

தலைவர்களுக்கான இரவு விருந்தில் பாட்டு பாடி அசத்தல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இரவு விருந்தில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் புகழ்பெற்ற பாலிவுட் பாடலைப் பாடினார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்த மலேசியப் பிரதமர், பிரிக்ஸ் தலைவர்களுக்கான இரவு விருந்தில் , பியானோ இசையோடு இணைந்து பாடினார்.
ஹெளமாவில் நடந்த தொடர் கத்திக்குத்து சம்பவம்
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள ஹெளமா பகுதியில் நடந்த தொடர் கத்திக்குத்துச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். முதலில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதன் பின்னர், அருகில் உள்ள வீடுகளில் மேலும் நான்கு பேர் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது. ஹௌமாவைச் சேர்ந்த கேகன் ஜூட் சோலெட் (Kaegan Jude Solet ) என்பவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், போலீசார் தேடி வருகின்றனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved