Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆழ்துளை கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது நெல் அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெல் பயிர்கள் நேற்று மாலை பெய்த கன மழையின் காரணமாக முற்றிலுமாக மழை நீரில் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் அருகே எட்டியலூர், பெரும்புகலூர், பாலாவை, சீவிலி, வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் சாய்ந்துள்ளன.

இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வேதனை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு இதுவரை 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சாய்ந்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved