Also Watch
Read this
By: Manigandan Raja

அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரே சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாகவும், பயிற்சியாளர் தேர்வில் முன்னாள் கேப்டன் தோனியின் பங்கு அதிகமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடிவுக்கு வரும் தேர்வுக் குழு தலைவரின் பதவிக்காலம்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறும் நிலையில்,புதிய தேர்வுக் குழு தலைவரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் வீரர்களான பார்த்தீவ் படேல் மற்றும் பிரக்யன் ஓஜா ஆகியோரில் ஒருவரை நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜப்பானுடன் நட்பு ரீதியிலான டி-20 கிரிக்கெட் போட்டி
ஜப்பான் நாட்டுடன் நட்பு ரீதியிலான டி-20 கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றம் செய்யப்பட்டு புதிய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், பும்ரா, துபே, இஷான் கிஷன், நிகம், அக்சர் படேல், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved