Also Watch
Read this
By: Manigandan Raja

முதல் பீர் பீப்பாயை மேயர் திறந்து வைத்து விழா தொடக்கம்
ஜெர்மனியில் உலகப் புகழ்பெற்ற ஒக்டோபர்ஃபெஸ்ட் ((Oktoberfest)) பீர் திருவிழா, முனிச்சில் கோலாகலமாக தொடங்கியது. நகர மேயர் டோமினிக் கிரவுஸ் பாரம்பரிய முறைப்படி முதல் பீர் பீப்பாயைத் திறந்து விழாவை தொடங்கி வைத்தார்.
பவேரிய பாரம்பரிய உடைகளில் ஆயிரக்கணக்கானோர் இசை, நடனத்துடன் விழாவில் பங்கேற்று வருகின்றனர். அக்டோபர் 4-ஆம் தேதி வரை இந்த பீர்த் திருவிழா நடைபெற உள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலியர் ஒருவர் உயிரிழப்பு
காசாவின் மேற்கு கரையின் நெவே சுஃப் அருகே பாலஸ்தீனியர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இஸ்ரேலியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேற்கு கரை சோதனைச் சாவடிகளில் இஸ்ரேல் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

தாக்குதலுக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனிய நபர், பின்னர் ரமல்லாவில் கைது செய்யப்பட்டார். இதனிடையே, வீரர்களை வாகனத்தால் மோத முயன்றதாக கூறப்பட்ட பாலஸ்தீனிய ஓட்டுநரை இஸ்ரேல் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள்-பயங்கரவாதிகள் இடையே மோதல்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பாதுகாப்புப் படை வீரர்களும், 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஹங்கு-டால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved