news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சேலத்தில் 3 போலீசார் அடுத்தடுத்து மரணம், பின்னணி என்ன?

மன உளைச்சலில் கதறும் காவல்துறை

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில், ஒரே வாரத்தில் 3 போலீசார் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. புதிய ஆணையரின் அதீத கெடுபிடிகளும் பணிச்சுமையும் தான் இந்த சோகத்திற்கு காரணமா? காவல்துறையில் நடப்பது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேலத்தில் இருந்து ஒரு கேள்வி
மக்களின் உயிரைப் பாதுகாக்கும் காவல் துறைக்கே இந்த நிலையா? சேலத்திலிருந்து கிளம்பியிருக்கும் இந்த கேள்வி, ஒட்டுமொத்த தமிழக காவல் துறையையுமே பேரதிர்ச்சியில் உலுக்கி கொண்டிருக்கிறது. சேலம் மாநகர காவல்துறையில் கடந்த சில நாட்களிலேயே, மிக குறுகிய இடைவெளியில் 3 காவல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

மூன்று காவலர்கள்...
சேலம் மாநகர போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, அதே போக்குவரத்து பிரிவை சேர்ந்த தலைமை காவலர் கலையமுதன் 8ஆம் தேதியும், சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய தலைமை காவலர் ஜெகதீசன் 13ஆம் தேதியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து உயிரிழப்பு ஏன்?
சேலம் மாநகர காவல்துறையில் அடுத்தடுத்து நடந்த இந்த 3 மரணங்களும், சக காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில், சேலம் மாநகர காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற ஜோசி நிர்மல் குமாரின் கெடுபிடிகளும், அதீத பணிச்சுமையும் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்து உள்ளது.

அதிரடி நடவடிக்கைகள்
காவல் ஆணையர் ஜோசி நிர்மல் குமார், போக்குவரத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்ததோடு, காவலர்கள் எந்நேரமும் பணியில் நின்றே ஆக வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கீழ்நிலை காவலர்களை ஒருமையில் பேசுவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அதிர வைக்கும் புகார்கள் வெளியாகி உள்ளன.

மன அழுத்தம் உச்சம்
தமிழக அரசு சார்பில் காவல்துறையினருக்கு மாதந்தோறும் மன அழுத்த மேலாண்மை வகுப்புகளும், புத்தாக்க பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சேலத்திலோ ஓய்வே இல்லாமல், இரவு, பகலாக தொடர் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், யாரிடம் சொல்வது என்று கூட தெரியாமல் பல காவலர்கள் கடும் மன அழுத்தத்தின் உச்சத்திற்கே சென்று பணியாற்றி வருவதாக வேதனையோடு புலம்புகிறார்கள்.

காவலர்கள் கொதிப்பு
அதேவேளையில், கீழ்நிலை காவலர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை மாநகர காவல் ஆணையரின் கவனத்திற்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கொண்டு செல்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது. காவலர்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் செயல்படும் நுண்ணறிவு பிரிவில், உடனடியாக அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் கீழ்நிலை காவலர்கள் தரப்பில் கொதிக்கிறார்கள்.

காவலர்களின் குரல்...
எனவே, சேலம் மாநகர காவல்துறையில் நிலவும் இந்த அப்நார்மலான சூழல் குறித்து, முதலமைச்சரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக தனி கவனம் செலுத்தி, நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு, தவறுகள் மற்றும் அத்துமீறல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, காவல்துறையினரின் பணிச் சுமையையும் மன அழுத்தத்தையும் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

Related Link
இன்ஸ்பெக்டர் மிரட்டிய மறுநாளே படுகொ*, விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

இன்ஸ்பெக்டர் மிரட்டிய மறுநாளே படுகொ*, விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved