Also Watch
Read this
By: Manigandan Raja

கடல் பகுதியை நோக்கி ஏவியதாக தென்கொரியா தகவல்
கடல்பகுதியை நோக்கி வடகொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வான்சான் பகுதியில் இருந்து சுமார் மூன்று மணி நேர இடைவெளியில் ஏவப்பட்ட ஏவுகணைகள், 450 மற்றும் 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்ததாக கூறப்படுகிறது. அந்த ஏவுகணைகள் கிழக்கு கடற்பகுதியில் விழுந்தன.
Robo Cup ஈரான் ஓபன் போட்டி
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ரோபோகப்(( RoboCup)) ஈரான் ஓபன் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மாணவர்கள் சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய கால்பந்து விளையாடும் ரோபோக்களை போட்டியில் காட்சிப்படுத்தினர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க திட்டம்
ஈரானில் சுமார் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, ஈரான் தாக்குதலில் சுமார் 1,700 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்களை திறந்தால் மாணவர்களுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படும் என உளவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved