news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

மஹ்சா அமினி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்

தெஹ்ரான் - பாரிஸ் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிப்பு

பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான காரணங்களைக் கூறி தெஹ்ரானில் பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை ஈரான் மூடியிருப்பது, இரு நாடுகளிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஹிஜாப் சட்டங்களை மீறியதாக கைதாகி போலீஸ் காவலில் உயிரிந்த குர்திஷ் இளம்பெண் மஹ்சா அமினியின் ((Mahsa Amini)) மரண விவகாரத்தில், பிரான்ஸ் "முதலைக் கண்ணீர்" வடிப்பதாக அப்பாஸ் அராக்சி விமர்சித்திருந்த நிலையில், பிரெஞ்சு மொழி மையம் மூடப்பட்டுள்ளது.

சீன மீன்பிடி கப்பல் மீது மோதிய பிரம்மாண்ட சரக்கு கப்பல்

சிங்கப்பூர் நீரிணை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீன மீன்பிடி கப்பல் மீது, பனாமா நாட்டு கொடியுடன் சென்ற பிரம்மாண்ட சரக்கு கப்பல் மோதிய வீடியோ வெளியாகியுள்ளது. மிகப்பெரிய சரக்கு கப்பல் மோதியதால் மீன்பிடி படகு நிலைகுலைந்து கடல்நீர் புகுந்த போதும், அதில் இருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பியதாக கூறப்படுகிறது.

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து

வடகிழக்கு சூடானின் செங்கடல் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி மேற்கு சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் பலியான நிலையில், ஒரே வாரத்தில் மற்றொரு தங்கச்சுரங்கத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது.


Related Link
வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியது

வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved