news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

"மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்"

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை தப்பிக்க விட்டது யார்? என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தப்பித்தது எப்படி? என அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மூடி மறைக்கப்பட்டது...
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
திமுக ஆட்சியில், தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் மூடி மறைக்கப்பட்டு உள்ளது. அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு தெரியாமல் இதை மூடி மறைத்திருக்க முடியாது. இதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். கண்டிப்பாக அவருக்குத் தெரிந்து தான் இது நடந்திருக்க வேண்டும்.

பாலியல் வழக்கு...
கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஜெம் கிரானைட் வீரமணி மீதான வழக்கு மிகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. அது மிகவும் கொடூரமான வழக்கு. இந்த போக்சோ வழக்கில் தோழர்களின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சிக் காலத்தில் அது மூடி மறைக்கப்பட்டது. அதை அவர்கள் கண்டிக்கிறார்களா இல்லையா? இதை நான் கோபமாகக் கேட்கவில்லை. அவர்களின் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் அல்லவா? கடந்த ஆட்சியில் ஏன் இப்படிப்பட்ட கொடூரமான வழக்கை மறைத்தனர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் நானும் ஜனநாயகவாதி, நானும் கம்யூனிச வகுப்பில் பாலன் இல்லத்தில் இருந்து வந்தவன் தான். அவர்கள்தான் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுத்தனர்.

பட்டினப்பாக்கத்தில்...
தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது, ஜனநாயக பூர்வமாக இருக்கிறது. இந்த உறுதியான கூட்டணியில் ஜனநாயகம் என்பது என்னவென்றால், எங்கள் மீது என்ன விமர்சனம் வேண்டுமானாலும் தோழர் சண்முகம் வைக்கலாம், அது அவர்களின் உரிமை. ‘சிஎம்-க்கு தெரியாமல் அரசாணை வருகிறதா?’ என்று அவர் கேட்கும் நோக்கம் என்னவென்றால், ‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டும் என்று நீங்கள் சேர்ந்து தானே முடிவெடுத்தீர்கள்?’ என்கிறார்.

அடம் பிடிக்கும் ஆட்சியாளர்கள்...
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அங்கிருக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெறும்போது, அவர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு உள்ளது. இன்று வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், ‘நான் எடுத்ததுதான் முடிவு, நான் கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன்’ என்று அடம் பிடிக்கும் ஆட்சியாளர்கள் அல்ல நாங்கள். அனைவரின் பேச்சு வார்த்தைக்கும் கருத்துக்களுக்கும் செவி கொடுக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தான் நாங்கள்.

இடைத்தேர்தல் சுயபரிசோதனை
எந்த முடிவாக இருந்தாலும், பெரிய அதிகாரிகள் மீது புகார் இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு இது உறுதியான கூட்டணி. அவர்கள் தனியாக வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிறுத்தி உள்ளனர். அவர்களுக்கும் எங்களது வாழ்த்து. ஜனநாயகத்தில் இது நல்லது தான். அவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்கின்றனர். நாங்கள் எங்களைச் சுயபரிசோதனை செய்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.

Related Link
ஜெம் கிரானைட் உரிமையாளரின் வக்கிர புத்தி? கோட் சூட் போட்ட கொடூரக்காரனா?

ஜெம் கிரானைட் உரிமையாளரின் வக்கிர புத்தி? கோட் சூட் போட்ட கொடூரக்காரனா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved