news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெம் கிரானைட் உரிமையாளரின் வக்கிர புத்தி? கோட் சூட் போட்ட கொடூரக்காரனா?
tv

Also Watch

ஜெம் கிரானைட் உரிமையாளரின் வக்கிர புத்தி? கோட் சூட் போட்ட கொடூரக்காரனா?

வாடகை வீட்டில் சிறுமிகளுக்கு பாலியல் டார்ச்சர்?

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் பல சிறுமிகளை வரவழைத்து, ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோட் சூட் போட்ட தொழிலதிபர் போலீசார் வலையில் சிக்கியது எப்படி?

அதிர்ச்சி கிளப்பிய வீடியோ
பணக் கஷ்டத்திற்காக வீட்டு வேலைக்கு வந்த கள்ளம் கபடம் இல்லாத பல சிறுமிகளை தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
கடந்த ஆண்டு, சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாலியல் தொழில் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு பகீர் கிளப்பும் பென் டிரைவ் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் பிரபல ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வீடியோ இருப்பதாக கூறி, பதற்றத்தை கிளப்பினார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அந்த பாலியல் வன்கொடுமை பைலை தூசி தட்டி தொழிலதிபர் வீரமணியையும் அதிரடியாக அரெஸ்ட் செய்திருக்கிறார். அதோடு பல சிறுமிகளையும் அவர் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டாரா? என்ற விசாரணை வேட்டையிலும் போலீசார் இறங்கினர்.

கொடூரம், பாலியல் தொல்லை 
தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த அவர், தனது கூட்டாளி சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை குடி அமர்த்தி நிர்வாக பொறுப்பையும் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. அந்த வீட்டிலேயே சிறுமிகளை வீட்டு வேலைக்கு சேர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், எவருக்கும் சந்தேகம் வராத வண்ணம் அவ்வப்போது அந்த வீட்டுக்கு விசிட் அடித்த தொழிலதிபர் வீரமணி, பல சிறுமிகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள் பறிமுதல்
பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த கோட் சூட் போட்ட தொழிலதிபர் வீரமணி, அதனை வீடியோ எடுத்து அரக்கனை போல் ரசித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே அந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தியதில் படுக்கை அறையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதோடு பல்வேறு முக்கிய ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பாலியல் குற்றத்துக்கு உறுதுணையாக செயல்பட்டதாக தோழி சாந்தி மற்றும் அவரது கணவன் மகேந்திர சிம்கன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை செப்டம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்கனுக்கும் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved