Also Watch
Read this
By: Manigandan Raja

சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கத்தார் வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிஷ், தாயிஃப், ஃபராசான் மற்றும் யான்பு((Bish, Taif, Farasan, and Yanbu)) ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடைபெற்றது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரினால் மத்திய கிழக்கு நாடுகள் வரை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு நிலநடுக்கம் போன்றது எனவும் கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது ((Sheikh Mohammed )) கருத்து தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்னையை கத்தார் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அல்-அக்ஸா மசூதி வளாக சுரங்கத்தில் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் அல்-அக்ஸா((Al-Aqsa)) மசூதி வளாகத்திற்குக் கீழே உள்ள சுரங்கங்கள் வழியாக செல்லும் காணொளியை பகிர்ந்துள்ளார்.

யோம் கிப்பூர் பண்டிகைக்கு முன்னதாக, மேற்குச் சுவரில் நடைபெறும் செலிச்சோட்((Selichot)) தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன் இவ்வழியாக பயணித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved