Also Watch
Read this
By: Manigandan Raja

13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்திய இந்தியா
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இதில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் 4 கோல்களை அடித்து அசத்திய நிலையில், வரும் செவ்வாய்க்கிழமையன்று இந்திய அணி இலங்கையுடன் மோத உள்ளது.
இந்திய அணியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணி முதலிடம்
இருபது ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 3க்கு 0 என தொடரை இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முறையே 3 முதல் 5வது இடத்தில் உள்ளன.

டி-20 போட்டியில் 30 பந்துகளில் சதமடித்த அபிஷேக் சர்மா
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, 30 பந்துகளில் சதமடித்தது அசாத்தியமான சாதனை என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இந்திய அணிக்கான சிறப்பான பங்களிப்பை அளிப்பார் எனவும் ஜெயசூர்யா கூறினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved