Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் பொருந்தவில்லை?
டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முந்தைய திருத்தத்தின் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் பெயர் பொருந்தவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டா் துறையில் முன்னணியில் இந்தியா
செமிகண்டக்டா் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் இடையூறுகள், இணையவழி தாக்குதல்களிடமிருந்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார்.

ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகள் மறுவரையறை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை மறுவரையறை செய்ய மோடி அரசு எடுத்துள்ள முடிவால், அந்த பகுதி மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்.

மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு உயர்மட்டக் குழு, இந்த நடவடிக்கையை நிராகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved