news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

செக் திருடி மோசடி செய்த அம்பிகா? போலீஸ் ஸ்டேஷனில் 'ராதா' கண்ணீர்

தங்கத்தை ராதா திருடியதாக பதில் புகார்

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்த் திரையுலகில் பார்ப்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவில் இருந்து வந்த அக்கா, தங்கையான ராதாவும் அம்பிகாவும் இப்போது ஆளுக்கொரு மூலையாய் முகத்தை திருப்பிக் கொண்டு வாழ, தனது செக்குகளை திருடி வைத்துக் கொண்டு 46 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ய முயன்றதாக அக்கா அம்பிகா மீது தங்கை ராதா காவல் நிலையத்தில் கண்ணீருடன் கம்ப்ளைண்ட் கொடுத்து பரபரப்பை கூட்டியிருக்கிறார். இந்நிலையில் அம்பிகாவும் பதிலுக்கு பதில் ராதா மீது மோசடி புகார்களை அடுக்கி இருக்கிறார்.

உடன்பிறந்த தங்கை...
சமீபகாலமாக, தமிழ்நாட்டில் எங்கு போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக ஓடிவந்து ஆதரவு தந்து லைம் லைட்டில் ஜொலித்து கொண்டிருந்த அம்பிகாவின் மோசடித்தனத்தை கமிஷனர் ஆஃபிஸ் வாசலில் வைத்து கப்பலேற்றிவிட்டார் அவரது உடன்பிறந்த தங்கை ராதா.

பிரம்மிக்க வைத்தவர்கள்
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களே பொறாமைப்படும் அளவுக்கு சுற்றித் திரிந்தவர்கள் தான் நடிகைகள் ராதாவும் அம்பிகாவும். 80களில் தமிழ்த் திரையுலகை கட்டியாண்ட நடிகைகளில் இவர்களும் அடங்குவர். பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லாமல் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி நடந்த காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ். கார்டன் என்ற பெயரில் தனியாக ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்து எம்.ஜி.ஆரின் கரங்களாலேயே திறக்க வைத்து பிரமிக்க வைத்தவர்கள்.

ஆர்.ஆர்.கார்டனில்...
வளசரவாக்கத்தில் ஏ.ஆர்.எஸ். கார்டன் தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அந்த அளவுக்கு இன்றளவும் தனித்த அடையாளமாக திகழ்கி்றது அந்த ஷூட்டிங் ஸ்பாட். 2006 ஆண்டு சொத்துக்களை பாகப்பிரிவினை செய்த போது அம்பிகாவுக்கு தனியாக காம்ப்ளக்ஸ் ஒன்றை கொடுத்துவிட்டு, ஏ.ஆர்.எஸ். கார்டனை கைப்பற்றிக் கொண்டார் ராதா. அதன் பிறகாகவே சமீபத்தில் தனது கணவரின் பெயரை சேர்த்து ஆர்.ஆர்.கார்டன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், சினி வட்டாரத்தில் இன்றளவும் ஏ.ஆர்.எஸ். கார்டன் என்றுதான் இந்த ஷூட்டிங் வளாகம் அறியப்படுகிறது.

வெற்று காசோலையில் கையெழுத்து
ஏ.ஆர்.எஸ். கார்டன் தவிர, ராதாவுக்கு பல சொத்துக்கள் சென்னையில் இருந்தாலும், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் பல ஆண்டுகளாக அக்கா அம்பிகாவும், ராதாவும் தங்கி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தான், தொழில் மற்றும் சொந்த வேலைக்காக வெளியூர் சென்ற ராதா, வெற்று காசோலைகளில் கையெழுத்திட்டு தனது அறையில் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆர்.ஆர். கார்டனில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனது வீட்டு பணியாளர்கள் என அனைவருக்கும் ஊதியம், பராமரிப்பு செலவு உள்ளிட்டவைகளை தரவேண்டும் என்பதால் முன்னேற்பாடாக வெற்று காசோலையில் கையெழுத்திட்டு வைத்துவிட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.

ரூ.46 கோடிக்கு...
இந்நிலையில், சமீபத்தில் ராதாவின் செல்போனுக்கு அம்பிகா என்ற பெயரில் காசோலை நிரப்பப்பட்டு டெபிட் செய்ய முயன்றதாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதனால் பதறிப்போன ராதா, வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஸ்டாப் பேமண்ட் செய்ய சொல்லியிருக்கிறார். ராதாவின் தம்பியான மல்லிகார்ஜூன்தான் 5 காசோலைகளை எழுதி நிரப்பி 46 கோடி ரூபாயை டெபிட் செய்ய முயன்றதாக வங்கி தரப்பில் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

அனுமதி இல்லை...
தனது ஆருயிர் அக்காவும், தம்பியும் காசோலை மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவத்தை அறிந்து மனம் நொந்துபோன ராதா, அம்பிகாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது அழைப்பை ஏற்காமல் அம்பிகா தவிர்த்துவந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தான், வளசரவாக்கம் வீட்டில் விலையுயந்த ஆபரணங்கள், ஆவணங்கள் என அனைத்தும் உள்ளதால் சந்தேகமடைந்து சென்னை விரைந்த ராதா, தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அம்பிகா தரப்பு அவரை வீட்டிற்குள்ளே அனுமதிக்காமல் அராஜகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசில் புகார்
மல்லிகார்ஜூன் மீது ஏற்கெனவே பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டும் ராதா, சட்டவிரோதமாக தனது செக்குகளை திருடி மோசடி செய்ய முயன்ற அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜூன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

தங்கம் திருட்டு, போலி புகார்
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்பிகா, மதுரவாயலில் உள்ள ஏ.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கேரளாவில் பத்திரப்பதிவு செய்து ராதா அபகரித்ததாகவும், ஆயிரத்து 299 கிராம் தங்கத்தை திருடிச் சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராதாவின் மோசடி குறித்து கேரளாவில் போலீசிடம் புகாரளித்து உள்ளதாகவும் அதுதொடர்பான செட்டில்மெண்ட்களுக்காகவே 5 செக்குகளை ராதா தன்னிடம் கொடுத்ததாகவும் அம்பிகா விளக்கமளித்துள்ளார். செக் மோசடி தொடர்பாக ராதா மீது வழக்கு தொடர்ந்துள்ளதால், அதிலிருந்து தப்புவதற்காக போலியான புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் முரளி...

Related Link
’சொந்த அக்காவே,’ கண்ணீர் மல்க நடிகை ராதா குற்றச்சாட்டு

’சொந்த அக்காவே,’ கண்ணீர் மல்க நடிகை ராதா குற்றச்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணியின் விருப்ப லிஸ்டில் பட்டியலின சிறுமிகள்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved