news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி, இலவச கேஸ் சிலிண்டர் நிறுத்தம்

பாட்டிக்கு மீண்டும் சிலிண்டர் கிடைக்குமா?

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இரண்டு மாதங்களாக கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை, ஆனாலும் அடுப்பை அணைக்கவில்லை, ஏழைகளின் பசியை போக்க, விறகு அடுப்பில் தொடர்ந்து இட்லி சுடும் கமலாத்தாள் பாட்டியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

94 வயதான கமலாத்தாள் பாட்டி
கோவை மாவட்டம், வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 94 வயதான கமலாத்தாள் பாட்டி, பல ஆண்டுகளாக ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் பசியைத் தீர்க்க வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார்.

விறகு அடுப்பில்...
கடந்த 6 ஆண்டுகளாக மாதத்திற்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சிலிண்டர் கிடைக்காததால், பாட்டி விறகு அடுப்பில் இட்லி சுடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முன்பு தினமும் 700 முதல் 800 இட்லிகள் வரை சுட்ட பாட்டி, தற்போது கடும் சிரமத்திலும் சுமார் 300 இட்லிகளை சுட்டு, அதே ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.

சிலிண்டர் கோரி மனு
உடல்நலக் குறைவு இருந்தாலும், தன்னை நம்பி வரும் ஏழை மக்களுக்கு இட்லி கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காக, ஓய்வெடுக்காமல் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே, சிலிண்டர் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டி மனு அளித்தார்.

பாட்டியின் பயணம்...
இதையடுத்து, தடையின்றி கட்டணமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

94 வயதிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் சேவை செய்யும் கமலாத்தாள் பாட்டியின் இந்தப் பயணம் உண்மையிலேயே நெகிழ வைக்கிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் அருண்...

Related Link
பால், வெண்ணெய் காலி, கர்நாடகா நெய் விற்பனை

பால், வெண்ணெய் காலி, கர்நாடகா நெய் விற்பனை

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணியின் விருப்ப லிஸ்டில் பட்டியலின சிறுமிகள்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved