Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்பை கிண்டல் செய்த ஈரான் தூதரகம்
ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த சண்டைக் காட்சியை பதிவிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்துள்ளது.
இதுகுறித்து ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கர்கள் சமீபகாலமாக ஹாலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட் திரைப்படங்களை பார்ப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி பலி
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இந்தியர்கள் சென்ற சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 20 இந்தியர்கள் உள்பட 28 பேருடன் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த 'எம்வி கேப் டோ' என்ற சரக்குக் கப்பல் மீது 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், மாலுமிகள் தங்கும் பகுதியும் கப்பலின் இயந்திர அறையும் சேதமடைந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவை சேர்ந்த மாலுமி சூரஜ் யாதவ் உயிரிழந்தார்.
நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, பாதிக்கப்பட்டவர்கள்
தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் ஐநா பொதுசபை கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் கூறினார். மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படத்தை கையில் வைத்தபடி பேசிய அவர், அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அதற்காக பணிந்து போக முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், அமைதியான முறையிலான பேச்சுக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், மிரட்டல்கள், அத்துமீறல்கள் மூலம் கட்டாயப்படுத்தி தங்களை பணிய வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved