news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்

டிரம்ப் வரவேற்றார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph 1

மரபுகளை மீறி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற அதிபர் டிரம்ப்

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மரபை மீறி விமான நிலையத்துக்கே நேரில் சென்று அதிபர் டிரம்ப் வரவேற்றார். வழக்கமாக வெள்ளை மாளிகையில்தான் வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க அதிபர் வரவேற்பார். ஆனால், இந்த முறை மரபுகளை மீறி டிரம்ப் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றது விவாதத்தை கிளப்பி உள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதித்துறை தலைவர் கொலை

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா நகரின் தெற்கே கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நிதித்துறை தலைவரான முகமது அபு அல்வான் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

செங்கடல் பகுதியை முழுமையாக கைப்பற்றிய ஹவுதி

ஈரான் படையினர் உதவியுடன் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் பகுதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 9-ம் தேதி முதல் செங்கடல் கடற்கரையை நோக்கி குறுகிய மலைப்பாதை வழியாக முன்னேறத் தொடங்கியவர்கள், மோக்கா துறைமுகம், மலைப்பகுதிகள் மற்றும் பல தீவுகளை கைப்பற்றினர். 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் இத்தாக்குதல்களை வழிநடத்தியதாக கூறப்படுகிறது.

Related Link
ஐநா பொதுசபை கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்

ஐநா பொதுசபை கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2007 ஐசிசி டி-20 உலகக் கோப்பை வென்று 19 ஆண்டுகள் நிறைவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved