அமெரிக்கா விசா வழங்க மறுத்ததால், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐநா பொதுச்சபையில் வீடியோ மூலம் உரையாற்றினார்.
காசா மற்றும் மேற்குக் கரையில் நிலவும் நெருக்கடி குறித்து பேசிய அப்பாஸ், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும்
வடகொரியாஅணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. புதிய அணு ஆயுத சோதனை ஏற்க முடியாதது என ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்த நிலையில், தங்கள் அணு ஆயுத நாடு அந்தஸ்து மீள முடியாதது என வடகொரியா கூறியுள்ளது.