news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கேஆர்பி அணையில் இருந்து 600 கன அடி நீர் திறப்பு

கிருஷ்ணகிரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KPR Dam

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உள்ள கேஆர்பி அணையில் கடந்த 3 மாதங்களாக ஆற்றில் 16 கன அடி நீர் மட்டுமே வந்ததால் போதிய நீர் இல்லாததால் அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து 45 அடியாக சரிந்தது.

இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக நீர் திறக்கமால் இடது, வலதுபுற கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு மட்டுமே வினாடிக்கு 162 கன அடி வீதம் திறக்கப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் போதுமான நீர் இல்லமால் இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து 5 நாட்களாக பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர் கனமழையால் அணைக்கு நீர்வரத்து 16 கன அடியில் இருந்து திடிரென 1150 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து இன்றைய நிலவரப்படி கேஆர்பி அணையில் நீர் இருப்பு 52 அடிக்கு 49.95 அடியாக உயர்ந்துள்ளது.


இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அணையில் இருந்து மேலும் அதிகளவில் உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
குளுக்கோஸில் கழிவறை தண்ணீர்? உயிரைக் காக்கும் இடத்தில் அலட்சியம்

குளுக்கோஸில் கழிவறை தண்ணீர்? உயிரைக் காக்கும் இடத்தில் அலட்சியம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved