Also Watch
Read this
By: Manigandan Raja

UPI சேவை வழங்கும் நிறுவனங்கள் பெறும் கட்டணம்
இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கட்டணம் அரசு விதிக்கும் வரி அல்ல, UPI சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெறும் கட்டணம் என்று அவர் கூறினார்.
இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கக் கூடாது என்றும், நிர்மலா சீதாராமன் கூறினார்
100% எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபரில் அறிமுகம்
100 சதவிகிதம் எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து இதுவரையில் எந்தப் புகாரும் வரவில்லை என்றார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved