news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

யூடியூபர் மதுமிதா வீட்டில் 125 சவரன் ஸ்வாஹா

’சோணமுத்தா போச்சா, சொல்பேச்சு கேக்கணும்’

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பணத்தை பஞ்சுபோல் தலையில் தூவி, விளையாடி வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு இளைஞர்கள் பலரை வெறுப்பேற்றி வந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 125 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. சுற்றுவட்டாரம் முழுக்க சிசிடிவி கேமராக்கள் இருந்தும் கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில் பலநாட்களாக மதுமிதாவிற்கு அறிவுரை கூறி வந்த அவரது ஃபாலோயர்கள் சொல்பேச்சு கேட்டால் தானே? என கமெண்டுகளும் செய்து வருகின்றனர்.

அடேங்கப்பா...
6 வீடுகள், கிலோ கணக்கில் தங்கம், வகைவகையான கார் என சகல சௌகரியங்களையும் சம்பாதித்து வைத்துள்ளவருக்கு, அதனை எப்படி கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தெரியாமல் போய்விடுமா? நகைகளை திருடுவெதல்லாம் ஜூஜூபி என்று நினைத்தீர்களா? என ஒரு இளைஞருக்கு இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்து கெத்து காட்டியிருந்தார் யூடியூபர் மதுமிதா. இதில் கவலை என்னவென்றால் தற்போது அந்த கெத்தெல்லாம் வெத்தாகி போனதுதான்.

திறந்த புத்தகம் போல்...
காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் படுக்கைக்கு சென்று தூங்குவது வரை சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருபவர்களின் எண்ணிக்கைதான் இன்றைய காலகட்டத்தில் அதிகம். அதிலும், இன்ஸ்டா, யூடியூபை திறந்தால்போதும் HOME TOUR, FRIDGE TOUR உள்ளிட்ட அலப்பறை வீடியோக்களை பார்க்காமல் அங்கிருந்து யாரும் நகர வாய்ப்பில்லை. வெறும் கமெண்ட், லைக் மற்றும் ஷேர்களுக்காக வீட்டு அட்ரஸ் முதல் பீரோவில் உள்ள துணிகள், நகைகள் என எல்லாவற்றையும் திறந்த புத்தகம் போன்று காட்டியும் வருகின்றனர். அதுபோன்றுதான், கட்டுக்கட்டான பணம், கழுத்து நிறைய நகைகள் அணிந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர் மதுமிதா.

கடுமையான விமர்சனம்
ஆண்களில் நடமாடும் நகைக்கடை வரிச்சியூர் செல்வம் என்றால் பெண்களில் மதுமிதாவை அந்த கேட்டகரியில் வைக்கலாம். அவரது வீடியோக்களை பார்க்கும் சிலர் நாங்களும் உங்களைபோன்றே பணத்தில் புரள வேண்டும், அதற்கு என்ன செய்யலாம் என கமெண்டுகளிலேயே ஐடியாக்கள் கேட்பதுண்டு. அதில் சிலர், நகைகள் உள்ளது என்பதை ஏன் பலருக்கும் காட்ட வேண்டும்? தன்னிடம் உள்ள நகைகளை எல்லாம் காட்டுவது பெருமையா? இதுபோன்று வீடியோக்கள் வெளியிட்டு திருடனுக்கு நாமே மேப் போட்டு கொடுப்பதா? என விமர்சனம் செய்வதுண்டு.

125 சவரன் நகைகள்
இதிலும் சிலர் மதுமிதா வீட்டுக்கு சென்று கொள்ளையடித்தால் லைஃப்டைம் செட்டில்மெண்ட் என்று வெளிப்படையாகவே கூறுவதுண்டு. இப்படி என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதனையெல்லாம் சற்றும் சட்டை செய்யாத மதுமிதா, விதவிதமான நகைகள், கூடவே கிளாமர் ஆடைகளுடன் பணத்தை கையில் அள்ளி தலைமீது தூவி விளையாடும் வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்தவே இல்லை. இந்நிலையில்தான், நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் உள்ள அவரது வீட்டில் 125 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய போது...
என்னதான் யூடியூப் மூலம் மதுமிதாவிற்கு சொல்லிக் கொள்ளக்கூடிய அளவில் ஒரு தொகை வந்தாலும் மதுமிதாவின் கணவர் வினோத்குமார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஏலக்காய் பிசினஸ்தான் நித்தமும் பண மழையில் குளிக்க வைத்துள்ளது.

பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழும் மதுமிதா ஏகப்பட்ட சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் துணிகள் வாங்குவதற்காக மாலையில் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டார் மதுமிதா. இரவு வீடு திரும்பியபோது, பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் ஒன்றுவிடாமல் வாரி வழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின்பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணை வளையத்தில்...
விஐபி கார்டன் சுற்றுவட்டாரம் முழுக்க சிசிடிவி கேமராக்கள் இருந்தும், மெஷின் கட்டர் மூலம் கதவை உடைத்து சிலமணிநேரத்திலேயே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது புரியாத புதிராவே உள்ளது.

மதுமிதாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பி உள்ளது. அதேநேரம், நகைகளை கொள்ளையடிக்க வேண்டும், அப்போதுதான் தங்களுக்கு நிம்மதியாக உறக்கமே வரும் என நகைச்சுவைக்காக கமெண்ட் பதிவிட்ட உள்ளிட்ட பலரும் விசாரணை வளையத்தில் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவிலும்...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் இதே போன்றுதான் வீடியோவில் தனது நகைகளை காண்பித்து பெருமைபீத்தி, கடைசியில் அது திருடுபோனதால் மீண்டும் வீடியோவிலேயே கண்ணீர்விட்டு கதறி கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதுபோன்று யூடியூபர் மதுமிதா கதறாவிட்டாலும் கெத்து காட்டியிருக்க கூடாதோ என்று நினைக்கலாம். நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம் என்ற பெயரில் ஒன்றுவிடாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டால் இதுபோன்ற இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீய சக்தி vs தூய சக்தி, வாழ்க்கை ஒரு வட்டம், "ஸ்வீட்டான ஸ்டாலின் அங்கிள்"

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved